1. Home
  2. தமிழ்நாடு

பெண்களே..! உங்களுக்கு இலவச தையல் மெஷின் வேணுமா..? எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா ?

1

மத்திய அரசு இலவச தையல் இயந்திரங்களை வழங்குகிறது என்பது உண்மைதான். இந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா என்பதாகும்.

பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் தையல் இயந்திரம் வாங்க ரூ.15,000 மத்திய அரசு தருகிறது. இந்தப் பணம் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அதனால் தையல் மூலம் வேலைவாய்ப்பையும் பெறலாம். இத்திட்டத்திற்கு பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் விண்ணப்பிக்கலாம். சரி, இந்தத் திட்டத்தை எப்படிப் பெறுவது என்று பார்ப்போம்.

இலவச தையல் இயந்திரத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.  பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் தையல் தொழில் செய்துகொண்டிருப்பவர் எவரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இலவச தையல் இயந்திர திட்டத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இலவச தையல் இயந்திர திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் அனைத்து முக்கிய ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பதாரரின் கணவரின் ஆண்டு வருமானம் ரூ.12,000 அல்லது குறைவாக இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களும் விண்ணப்பித்து பயன் பெறலாம்.பெண் விதவையாக இருந்தால் விதவை சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டை, முகவரிச் சான்று, அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மொபைல் எண், வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? முதலில் https://pmvishwakarma.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். இது பதிவு செய்யப்பட வேண்டும். ஆன்லைனில் செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தால், உங்கள் அருகிலுள்ள CSC மையத்திற்குச் சென்று அதைச் செய்துகொள்ளலாம். மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை உங்களுடன் வைத்திருக்க வேண்டும். உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, நீங்கள் ஒரு ஒப்புதலைப் பெறுவீர்கள்.

Trending News

Latest News

You May Like