10ம் வகுப்பில் சாதித்த கூலி தொழிலாளியின் மகள்..!
மதுரை உசிலம்பட்டி அருகே விவசாய கூலி தொழிலாளியின் மகளான ஜெ.சுஸ்யா, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். அரசுப் பள்ளியில் படித்த மாணவி சுஸ்யா சிறப்பாகப் படித்து சாதித்துக் காட்டியுள்ளார். அவர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளார்.
விவசாய கூலித் தொழிலாளியின் மகளான சுஷ்யா, கஷ்டப்பட்டு படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், அவர் படித்த பள்ளி ஆசிரியர்களும், அப்பகுதி மக்களும் மாணவி சுஸ்யாவை பாராட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் – வசந்தி தம்பதியினர் . தர்மராஜ் வெல்டிங் பட்டறை ஒன்றில் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் காவிய ஜனனி கமுதி உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் .இவர் மொழி பாட மான தமிழில் 99 ம், மற்ற பாடங்களில் தலா 100மதிப்பெண்கள் பெற்று, 500-க்கு 499 எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
மிகவும் பின் தங்கிய பகுதியான கமுதி பகுதியில் படித்து 499 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் . இது குறித்து மாணவியின் தாய் வசந்தி கூறும்போது . நானும் என் கணவரும் கூலி தொழில் செய்து வருகிறோம் . காவியா ஜனனிக்கு கலெக்டர் ஆவது லட்சியம், அதன் படி 499 மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி, பிளஸ் டூவிலும் அதிக மதிப்பெண் எடுத்து மாவட்டத்திற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்ப்பார் என தெரிவித்தார்