1. Home
  2. தமிழ்நாடு

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனின் மனைவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனின் மனைவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து மே 7-ம் தேதி தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு (தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு) அமைச்சசராக பதவியேற்றார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார்.

நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பவானி அம்மாள், நேற்று விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சரின் மனைவி மறைவிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களின் துணைவியார் திருமதி. பவானி அம்மாள் அவர்கள் திடீரென்று மறைவெய்திய அதிர்ச்சி செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது ஒவ்வொரு துளி முனேற்றத்திற்கும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்த வழ்க்கைத் துணைவியாரை இழந்து வாடும் மாண்புமிகு அமைச்சர் திரு.கணேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like