1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் மாநிலங்களவை எம்.பி ஆகிறார் எல்.முருகன்..?

Q

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட உள்ளார்.

எல்.முருகனின் பதவிக்காலம் வரும் ஏப்ரலில் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் இந்த முறை போட்டியிட உள்ளார். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் எல்.முருகன். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் எல்.முருகன் போட்டியிடுகிறார்.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய தலைமை வெளியிட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார்.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.

Trending News

Latest News

You May Like