1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எல்.முருகன் பேட்டி..!

1

மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் எல்.முருகன் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையுடன், கால்நடைத்துறை இணை அமைச்சராக இருந்தார்.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர், மத்திய ரயில்வே துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பூபேந்திர யாதவ் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மின்துறை அமைச்சராக மனோகர் லால் கட்டார், சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக சுரேஷ் கோபி, ஜவுளித்துறை அமைச்சராக கிரிராஜ் சிங், ஜவுளித்துறையின் இணை அமைச்சராக பவித்ரா மார்கரிட்டா, தொழில் முனைவோர் அமைச்சகத்தின் இணை அமைச்சராக ஜெயந்த் சவுத்ரி பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் பார்லிமென்ட் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார். அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு பணியை துவங்கினார். பின்னர், ''தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை முக்கியமான ஒரு துறை. மீண்டும் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி. பிரதமர் மோடிக்கு நன்றி'' என எல்.முருகன் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like