1. Home
  2. தமிழ்நாடு

கே.வி.தங்கபாலு, கே.பாலகிருஷ்ணன் உடல் நிலை பாதிப்பு: நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

கே.வி.தங்கபாலு, கே.பாலகிருஷ்ணன் உடல் நிலை பாதிப்பு: நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்


தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.வி.தங்கபாலு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இதற்கிடையே அவரின் உடல்நிலை குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இது தொடர்பாக முகநூலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான அருமை நண்பர் கே.வி. தங்கபாலு அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகச் செய்தி அறிந்தேன். தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். நலம் பெற்று வருவதாக அவரும் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து, அவரையும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.

இருவரும் விரைவில் நலம்பெற விழைகிறேன். பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான அருமை நண்பர் கே.வி. தங்கபாலு அவர்கள்...

Posted by M. K. Stalin on Monday, 12 October 2020

Trending News

Latest News

You May Like