லால் சலாம் படம் குவைத் நாட்டில் திரையிட தடை..?
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் லால் சலாம். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
மேலும், 'லால் சலாம்' படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர். அத்துடன் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த பொங்கலுக்கே இப்படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் திட்டமிட்டப்படி படத்தினை ரிலீஸ் செய்ய முடியவில்லை.
வரும் 9 ஆம் தேதி 'லால் சலாம்' படம் வெளியாகவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 'லால் சலாம்' படத்தினை குவைத் நாட்டில் ரிலீஸ் செய்ய, அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும் மத அரசியல் குறித்து பேசியுள்ளதால், இப்படத்திற்கு குவைத் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.