1. Home
  2. தமிழ்நாடு

குஷ்புவின் பரிசு.. நெகிழ்ச்சி அடைந்த நீட் சாதனை மாணவர் !

குஷ்புவின் பரிசு.. நெகிழ்ச்சி அடைந்த நீட் சாதனை மாணவர் !


எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடந்த நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. வடமாநிலத்தில் தேர்வு எழுதியவர்களை விட அதிகமானோர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதே இதற்கு காரணம்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவு வெளியானதும் தேனியைச் சேர்ந்த ஜீவித்குமார் என்ற மாணவர் இந்திய அளவில் சாதனை படைத்தார்.

பெரியகுளம் சில்வார்பட்டி அரசு மாதிரி பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற ஜீவித் குமார், கடந்த ஆண்டு நீட் தேர்வில் 193 மதிப்பெண் பெற்றார். இதனால் அவர் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை உண்டானது.

இதனையடுத்து மீண்டும் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அவர் இந்தாண்டு தேர்வெழுத்தி அதில் 664 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் 1,823வது இடம் பிடித்துள்ளார்.

இதனிடையே ஆசிரியை சபரிமாலா, தனது முகநூல் பக்கத்தில் மாணவர் ஜீவித் குமாரை தத்தெடுத்து செலவு செய்து படிக்க வைத்தாக கூறியிருந்தார். ஆனால் இதற்கு மாணவர் ஜீவித் குமார் மறுப்பு தெரிவித்ததால் சர்ச்சை எழுந்தது.

இதற்கிடையில், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, மாணவர் ஜீவித்குமாருக்கு மடிக்கணினியை வழங்கியுள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு, மாணவர் ஜீவித் குமாருக்கு லேப்டாப் பரிசாக வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், அவருடன் பேசி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.


newstm.in

Trending News

Latest News

You May Like