1. Home
  2. தமிழ்நாடு

அ.தி.மு.க. கூட்டணியில் கும்மாங்குத்து... "துணை முதல்வர்" பதவி யாருக்கு ?

அ.தி.மு.க. கூட்டணியில் கும்மாங்குத்து... "துணை முதல்வர்" பதவி யாருக்கு ?


அ.தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகள், எப்படியும் "துணை முதல்வர்" பதவியை பிடித்துவிட வேண்டும் என காய் நகர்த்தி வருகின்றன.

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் பல்வேறு சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில், அ.தி.மு.க-வில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியே, மீண்டும் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது.

அதே வேளையில், துணை முதல்வர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.இந்நிலையில், "துணை முதல்வர்" பதவியை கைப்பற்ற அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் லாவகமாக காய் நகர்த்தி வருகின்றன.அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறும் கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும், அல்லது பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., என அனைவரும் சர்ச்சை இன்றி துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி செய்வதன் மூலம் தி.மு.க தலைமையை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த முடியும் என்றும், அதே வேளையில், தங்களது கூட்டணி கட்சிகளை உற்சாகப்படுத்த முடியும் என்றும் கருதி காய் நகர்த்தப்படுகின்றதாம்.

தேர்தல் என்றாலே சர்ச்சைகள் ரெக்கை கட்டி பறக்கத்தானே செய்யும் தலைவா....எல்லாம் அவன் செயல்...

newstm.in

Trending News

Latest News

You May Like