1. Home
  2. தமிழ்நாடு

இன்று அயோத்தியில் கும்பாபிஷேகம்.. தாக்குதல் நடத்துவோம் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக எச்சரிக்கை..!

1

ராமர் கோயில் திறப்பு விழாவின்போது தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவின்போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக அயோத்தி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படையிடம் (எஸ்பிஜி) அயோத்தி நகர பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி), தீவிரவாத தடுப்புப் படை, சிறப்பு கமாண்டோ படை, சிஆர்பிஎப், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மாநில போலீஸார் என சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் 11,000-க்கும் மேற்பட்ட கேமராக்கள் அயோத்தி முழுவதும் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் பழைய குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காண முடியும். ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள், கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

Trending News

Latest News

You May Like