1. Home
  2. தமிழ்நாடு

கும்பகோணம் கோவில் யுனெஸ்கோ விருதுக்கு தேர்வு..!

Q

கும்பகோணம் தாலுகா, துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், 1,300 ஆண்டுகள் தொன்மையானது.

இக்கோவிலில் கடைசியாக எப்போது கும்பாபிஷேகம் நடந்தது என்ற தகவல் இல்லாத நிலையில், ரூ.5 கோடி மதிப்பீட்டில், கோவிலின் தொன்மை மாறாமல் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் முடிந்து, 2023ம் ஆண்டு, நவ., 3ம் தேதி கோவில் கும்பாபிஷகம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ), தொன்மை மாறாமல் புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்தி, பாதுகாத்தமைக்காக இக்கோவிலை, 2024ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுக்கு தேர்வு செய்துள்ளது. இத்தகவலை, இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like