1. Home
  2. தமிழ்நாடு

பெண்கள் நடத்தும் கும்பாபிஷேகம்: தஞ்சை அருகே இன்று நடக்கிறது..!

1

இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை மற்றும் உலகளாவிய ஆசீவக தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவித்தை ஞானபீடம் சார்பாக, தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த, திருபுவனம் இந்திரா நகரில் அமைந்துள்ள ஆதிசக்தி அம்மன் ஞானபீடம் மற்றும் விநாயகர், முருகன், வாலைக்குமாரி, பதினெண் சித்தர்கள், ஸ்ரீலஸ்ரீ மூட்டை சுவாமிகள் அருள்கூட கும்பாபிஷேகம் இன்று 6-ம் தேதி காலை 9.15 மணியில் இருந்து 10.15 மணிக்குள் நடக்கிறது. 

ஆசீவகத் தமிழ் சித்தர் கண்ணன் அடிகள் முன்னிலை வகிக்கிறார். நேற்று முன்தினம் மாலை தொடங்கிய முதல் கால யாகசாலை பூஜையில் தமிழ் வேத மந்திரங்களை பெண்களே ஓதி நடத்தினர். தொடர்ந்து இன்று நடைபெற உள்ள நான்கு கால யாகசாலை பூஜைகளிலும் பெண்களே தமிழ் மந்திரங்கள் ஓதுகின்றனர். 

அது மட்டுமல்லாமல் இன்று நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்தையும் தமிழகத்தில் முதன்முறையாக பெண்களே நடத்துகின்றனர். அப்போது உழவுத் தொழிலின் குறியீடாம் பச்சை ஆடை உடுத்தி பெண்கள் கோயிலின் கருவறைக்கு சென்று, அவர்களது திருக்கரங்களால் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்ய உள்ளனர். 

சித்தர் முறைப்படியும், சித்தர் மரபுபடியும் இக்குடமுழுக்கு நடைபெற உள்ளது. நிறைவாக விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

Trending News

Latest News

You May Like