'குடும்பஸ்தன்' படம் ஒடிடி ரிலீஸ் தேதியில் மாற்றம்!

சூர்யா நடிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், வெளியாக ஜெய்பீம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த மணிகண்டன், அதன்பிறகு குட்நைட் என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தார். அடுத்து இவர் நடித்த லவ்வர் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதன் மூலம் வரிசையாக 2 வெற்றிப்படங்களை கொடுத்த மணிகண்டன், அடுத்து குடும்பஸ்தன் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
மற்ற படங்களை போல் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், கடந்த ஜனவரி 24-ந் தேதி இந்த படம் வெளியானது. நக்கலைட்ஸ் யூடியூப் திரைப்பட இயக்குனர், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கிய இந்தப் படம், விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், வசூலிலும் பெரிய வெற்றியை பெற்ற படமாக மாறியது. குடும்பத்தில், எதிர்பாராமல் நடக்கும், சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட குடம்பஸ்தன் திரைப்படம், ஒடிடி தளதில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திரையரங்குகளில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, பிப்ரவரி 28-ந் தேதி (நேற்று) குடும்பஸ்தன் திரைப்படம் ஜீ5-ல் வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனாலும் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஓட்டம் மற்றும் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவு காரணமாக, படத்தின் ஒடிடி வெளியீட்டு தேதி இப்போது மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'குடும்பஸ்தான்' படத்தில் மணிகண்டன் சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம் மற்றும் ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.