குடும்பஸ்தன்' பட நடிகை சான்வே மேக்னாவுக்கு மோசமான காயம்..!!
நடிகை சான்வே மேக்னா ஷூட்டிங்கில் பங்கேற்றபோது அருகில் இருந்த சூடான எண்ணெய் மூலமாக விபத்து ஏற்பட்டு கை முழுக்க காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது.
அதை புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். கைகளில் காயம் இருந்தாலும் அவர் அப்படியே ஒரு கல்லூரி நிகழ்ச்சியிலும் சமீபத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்.
குடும்பஸ்தன்' திரைப்படம் மூலம் பிரபலமானவர் தான் சான்வி மேக்னா. ஹைதராபாத்தை சேர்ந்த சான்வி, தெலுங்கில் சீரியல் நடிகையாகவும், மாடலாகவும் தன்னுடைய பணியை துவங்கிய நிலையில்... பின்னர் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பின்னர் தமிழிலும் கால்பதித்தார்