1. Home
  2. தமிழ்நாடு

குவியும் பாராட்டுக்கள்..! வாயில்லா ஜீவன்களின் தாகத்தை தீர்க்க மாணவர்களிடம் விழுப்புணர்வு..!

1

வாயில்லா ஜீவன்களின் தாக்கத்தை தீர்க்க நாம் உதவவேண்டும் என்ற எண்ணத்தை சிறுவர், சிறுமியர் மனதில் பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கோவை மாவட்ட வனத்துறை மூலம் 'பறவைகளுகான நீர் சட்டிகள்' வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்கணபதி ராஜ்குமார், ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், 'சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய'த்தின் மூத்த விஞ்ஞானி பிரமோத்
ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சட்டிகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ், இந்த முறை ஆனைமலை புலிகள் காப்பதத்தில் விலங்குகளுக்கு வைக்கப்பட்ட நீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்கென தனி டிராக்டர்கள் வாங்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் காடுகளுக்குள் ஏற்படும் தீ குறித்து செயற்கைகோள் கைப்படங்கள் மூலம் உடனடியாக எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது எனவும் குறுஞ்செய்தி வந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்கவும் முடிந்தவரை அதனை தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Trending News

Latest News

You May Like