1. Home
  2. தமிழ்நாடு

`நேர்மை'க்கு குவியும் பாராட்டுக்கள்...!

1

ஹைதராபாத்தைச் சேர்ந்த நித்திஷ் என்பவர் தன் பையை ஆட்டோவிலேயே மறந்து விட்டுச்சென்றுள்ளார்.

இதை கவனித்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் ,பையில் 40 சவரன் நகை மற்றும் விலை உயர்ந்த டேப் இருப்பதை கண்டு ,உடனடியாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் . ஆட்டோ ஓட்டுநரின் இந்த நேர்மையான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தனது ஆட்டோவில் பயணித்த நித்திஷ் என்பவர் தவற விட்டுச் சென்ற ₹25 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் நகைகளை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் சரவணனின் நேர்மையான செயலுக்காக சென்னை காவல் ஆணையர் அருண், இவரை நேரில் அழைத்து பாராட்டினார்.


 

Trending News

Latest News

You May Like