1. Home
  2. தமிழ்நாடு

குபேரா..எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது?

1

 தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோரும் நடித்துள்ளனர். ராம் மோகன் ராவ் மற்றும் சுனில் நரங் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடா, தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியானது.

இதனிடையே படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மட்டுமே இந்த படம் ரூ. 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி மூன்று நாட்களில் குபேரா படம் உலகளவில் 55 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் குபேரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் எந்த தளத்தில் வெளியாகப் போகிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குபேரா படத்தின் OTT உரிமைத்தை முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனமான அமேசான் பிரைம் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமைகள் சுமார் ரூ.47 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடிய விரைவில் படம் ஓடிடி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like