7வது முறையாக தோல்வியை தழுவினார் கிருஷ்ணசாமி..!
புதிய தமிழகம் கட்சி' சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஏழாவது முறையாக தோல்வியை தழுவி இருக்கிறார்.
ஏற்கனவே 1998, 1999, 2004, 2009, 2014 5 2019 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்த அவர், இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் இருந்தார். பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு வந்த அவர், இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கினார். ஆனால் இந்த தேர்தலிலும் அவர் தோல்வியையே தழுவி இருக்கிறார்.