1. Home
  2. தமிழ்நாடு

இன்று கிருஷ்ண ஜெயந்தி : அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் வாழ்த்து..!

1

காக்கும் கடவுளாம் கண்ணபிரான் கிருஷ்ணராக அவதரித்த திருநாளை “கிருஷ்ண ஜெயந்தி” என்று மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினமான கிருஷ்ண ஜெயந்தியன்று, மக்கள் தங்கள் இல்லங்களில் அழகிய வண்ணக் கோலங்களிட்டு, வாயிற்களில் மாவிலை தோரணங்களைக் கட்டி, ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தைகளின் பிஞ்சு பாதச் சுவடுகளை மாவில் நனைத்து இல்லங்களில் வழிநெடுக பதித்து, கிருஷ்ணருக்கு விருப்பமான வெண்ணெய், தயிர், பழங்கள், இனிப்பு பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வழிபட்டு மகிழ்வார்கள்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "எக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலான  வாழ்க்கை நெறிமுறைகளைக் கூறும் பகவத்கீதையை அருளிய, பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமான இன்று,  அனைவருக்கும்  தமிழ்நாடு பாஜக  சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அனைவர் வாழ்விலும் தீயவை அகன்று நன்மை கிடைக்கட்டும். அனைவர் இல்லங்களிலும் பகவான் கண்ணனின் பொற்பாதங்கள் தவழட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். அதர்மத்தை அழித்து, தர்மத்தைக் காக்க, பகவான் என்றும் நல்லவர்களுக்கு துணையிருக்கட்டும்."என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் , ஸ்ரீ கிருஷ்ணரின் வருகையால் நம் இல்லமும், உள்ளமும், அன்பாலும், அமைதியாலும், அனைத்து வளங்களாலும், நலன்களாலும் நிறையட்டும்! அனைவருக்கும் இனிய கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்! என்று குறிப்பிட்டுள்ளார். 


 

Trending News

Latest News

You May Like