1. Home
  2. தமிழ்நாடு

சொக்க தங்கம் நினைவிடத்தில் KPY பாலா செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Q

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு கலகலப்பாக பேசி ரசிகர்களின் மனதில் மனம் இடம் பிடித்தவர் பாலா. இவரின் வித்தியாசமான பேச்சு, நரம்பு போல இருக்கும் இவரின் உடல்வாகும், அந்த உடலை வைத்துக்கொண்டு இவர் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படி இருக்கும். இதனால், ரசிகர்களின் மனதில் வெகுவிரைவில் ஒட்டிக்கொண்டார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, குக் வித் கோமாளியில் சிவாங்கி, மணிமேகலை,குரோஷி என அனைவரிடமும் கூட்டு சேர்ந்து டைமிங் ஜோக் அடித்து பட்டையை கிளப்பினார். நகைச்சுவையில் கலக்கி வந்த பாலா தற்போது இசைவெளியீட்டுவிழா நிகழ்ச்சி, பட நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்

உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவி செய்து வருகிறார் KPY பாலா. பலரை சிரிப்பால் மகிழ்வித்து வந்த பாலா, மனமுவந்து செய்யும் உதவியால், பலரை மகிழ்வித்து வருகிறார்.

இதுவரை மக்களுக்காக தனது சொந்த செலவில் 4 இலவச ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்து இருக்கிறார் பாலா.

இதனை தொடர்ந்து சமீபத்தில் தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கான இலவச ஆட்டோ சேவையை வழங்கி இருந்தார் பாலா

தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வரும் பாலாவிற்கு சமீபத்தில் கேப்டன் புரட்சி கலைஞர் விருது கிடைத்து இருந்தது. அந்த விருதை எடுத்துக்கொண்டு கேப்டனின் நினைவிடத்திற்கு சென்று ஆசி வாங்கினார் பாலா. அப்போது +11 படிக்கும் மாணவனின் தாயார் ஒருவர் தனது மகனின் படிப்பிட்டிற்காக பாலாவிடம் உதவி கேட்டார். உடனே தன்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்துக்கொடுத்தார் பாலா. இதனை கண்டு அந்த தாய் கண்ணீர் மல்க பாலாவிற்கு நன்றி தெரிவித்தார்.


 


 

Trending News

Latest News

You May Like