1. Home
  2. தமிழ்நாடு

கொவிட் - 19  டெனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட குட் நியூஸ்!

கொவிட் - 19  டெனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட குட் நியூஸ்!


இன்னும் ஒரே ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், பென்சில்வேனியாவில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3 -ம் தேதி நடைபெறுகிறது. ஆனால், வாக்குபதிவு அன்று மட்டும் அல்லாமல், அதற்கு முன்னதாக வாக்களிக்கும் முறை அங்கு அமலில் உள்ளது, இதநை பயன்படுத்தி 60 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளாராம். இதனையடுத்து, அவர்கள் ஒரு தகவல் கொடுத்துள்ளனர். அதை வைத்து ஒரே மாதத்தில் கொவிட் 19 தடுப்பு மருந்து தயாராகி வருவதாக டிரம்ப் பேசியுள்ளார்.

மேலும், எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

Trending News

Latest News

You May Like