அதிமுக ஐடி விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக மாணவர் அணி செயலாளர் பொறுப்பு வகிக்கும் எஸ்.ஆர். விஜயகுமார், துணை செயலாளர் கோவிலம்பாக்கம் சி. மணிமாறன், அதிமுக ஐடி விங் தலைவராக உள்ள சிங்கை ராமச்சந்திரன், இணைச் செயலாளராக உள்ள கோவை சத்யன் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மாணவர் அணி செயலாளராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப் படுவதாகவும், அதிமுக ஐடி விங் தலைவராக கோவை சத்யன் நியமிக்கப் படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக ஸ்.ஆர். விஜயகுமாரும், ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக கோவிலம்பாக்கம் சி. மணிமாறனும் நியமிக்கப்பட்டுளளனர்.