1. Home
  2. தமிழ்நாடு

கொனிடேலா பவன் கல்யாண் அனே நேனு.. துணை முதல்வரானார் பவன் கல்யாண்..!

1

2014 ஆம் ஆண்டு ஜனசேனா கட்சியை தொடங்கினார் பவன் கல்யாண். அப்போது நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம் பாஜக கூட்டணியை ஆதரித்து போட்டியிலிருந்து விலகி இருந்தார். ஆனால், 2019 தேர்தலில், அப்போதைய சூழ்நிலை காரணமாக பாஜக மற்றும் தெலுங்கு தேசம் இரண்டிலிருந்தும் விலகி தனித்து போட்டியிட்டார்.அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தார். ஆனால் 2019 தேர்தலுக்குப் பிறகு, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்த பவன் கல்யாண், 2024 தேர்தலுக்கு முன் ஆந்திர அரசியலில் நடந்த அதிரடியான நிகழ்வுகளின் காரணமாக தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கூட்டணியை உருவாக்கினார்.பவன் கல்யாண் பிதாபுரத்தில் போட்டியிட்டு சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் வங்கா கீதாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். 


நான் கொனிடேலா பவன் கல்யாண்.. என அமைச்சராக பதவியேற்றார் ஜன சேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண். பவன் கல்யாணுக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சந்திரபாபு முதல்வராக பதவியேற்ற உடனேயே பவன் பதவியேற்றார். பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிறகு, பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் என அனைவரிடமும் ஆசி பெற்றார் பவன் கல்யாண்.

தொடர்ந்து அவரது அண்ணன் மெகா ஸ்டார் சிரஞ்சீவியிடம் சென்று அவர் காலில் விழுந்து வணங்கினார் பவன் கல்யாண். சட்டென யாரும் எதிர்பாராத நேரத்தில் அவரது காலில் விழுந்து நெகிழ வைத்தார் பவன் கல்யாண். பவன் கல்யாணின் இந்த செயலால் சிரஞ்சீவியும் நெகிழ்ந்து போனார். 

இதனிடையே, சந்திரபாபு தலைமையிலான அமைச்சரவையில் பவன் கல்யாணுக்கு துணை முதல்-மந்திரி வழங்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like