மக்கள் கூட்டத்தில் நிரம்பிவழியும் கோனியம்மன் தேர் திருவிழா..!

கோனியம்மனுக்கு கோவை டவுன் ஹால் பகுதியில் சிறப்பான கோவில் உள்ளது. அம்மனின் தேர் திருவிழா ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக நடைபெறும். இன்று மதியம் இந்த தேர் திருவிழா துவங்கியது. இந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் பெரும் கூட்டமாக கூடியுள்ளனர்.
சிறு தகராறை தடுத்த போலீசார்
இந்நிலையில் நிகழ்வுக்கு முன்னதாக, திருவிழாவை காண வந்தவர்களில் 2-3 பேர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் மோதலமாக மாறிய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அங்கு கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. அப்போது இந்த சம்பவம் நடந்தது. இந்த மோதல் சம்பவத்தின் போது வாகனத்தில் 2 குழந்தைகளுடன் சென்ற பெண் ஒருவர் சிரமத்துக்குள்ளாவது வீடியோவில் பதிவானது.
