1. Home
  2. தமிழ்நாடு

கொல்கத்தா அணி அபார வெற்றி..!

1

நேற்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் பில் சால்ட் 5 ரன்களிலும், சுனில் நரைன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து ரகுவன்சி 13 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தனர். பின்னர் கை கோர்த்த வெங்கடேஷ் ஐயர் - மனீஷ் பாண்டே இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அரைசதம் அடித்தார். மனீஷ் பாண்டே 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

KKR vs MI

இதனையடுத்து களமிறங்கிய ரசல் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த கொல்கத்தா 169 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணியை போல மும்பை அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா (11), இஷான் கிஷன் (13), திலக் வர்மா (4), நமன் திர் (11), நேஹல் வதேரா (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் பாண்ட்யா (1) வந்த வேகத்தில் நடையை கட்டினார்.

KKR vs MI

இதனால் மும்பை அணி 76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. எனினும், சூர்யகுமார் யாதவ், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதம் அடித்த அவர், 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த டிம் டேவிட்டும் 24 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தை தக்கவைத்துக் கொண்டது. கொல்கத்தா தரப்பில் மிட்சேல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி, 3 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அத்துடன், மும்பை அணியின் பிளே ஆப் கனவும் இன்றைய தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

Trending News

Latest News

You May Like