கொல்கத்தா அணிக்கு 112 ரன்கள் வெற்றி இலக்கு..!

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிரீமியர் லீக் தொடரின் 31வது போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் அணியும் கோல்கட்டா அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடினர். இதில் ப்ரியான்ஸ் ஆர்யா 22 ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களும் எடுத்து ஹர்சித் ராணா பந்தில் ஆட்டமிழந்தனர்.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஹர்சித் ராணா பந்தில் அவுட் ஆனார்.
மேக்ஸ்வல் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வருண் பந்தில் அவுட் ஆனார். மற்றவர்கள் சோபிக்கவில்லை.
கோல்கட்டா அணியின் மிரட்டலான பந்துவீச்சில் ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பஞ்சாப் அணியின் மோசமான பேட்டிங்கால் 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.கோல்கட்டா அணி 112 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கி உள்ளது.