1. Home
  2. தமிழ்நாடு

பெங்களூரு அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..

1

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் கொல்கத்தா அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அதன்படி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி களமிறங்கியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். டு பிளெஸ்ஸி 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், கேமரூன் கிரீன் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களை உயர்த்தியது. இருப்பினும்,கேமரூன் கிரீன் 33 ரன்களில் ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் ஹர்சித் ராணா மற்றும் ஆண்ட்ரே ரஸல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது.கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் சால்ட் 30 ரன்களும், சுனில் நரைன் 47 ரன்களும் அதிரடியாய் விளாச அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 6.3 ஓவர்களில் 86 ரன்கள் எடுத்திருந்த போது, சுனில் நரைன் ஆட்டமிழந்தார்.அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் அரைசதம் விளாச, கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 39 ரன்கள் எடுத்தார். இறுதியில் 16.5 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது..

 
 

Trending News

Latest News

You May Like