1. Home
  2. தமிழ்நாடு

கொடைக்கானல் ஊட்டி செல்ல இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு..!

1

கோடைகாலத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் அங்குள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க கொரோனா காலத்தில் அமல்படுத்தியதுபோன்று இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி வருகிற 7-ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, epass.tnega.org என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் இன்று காலை 6 மணி முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று நீலகிரி கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இணையதளம் வாயிலாக நேற்று இரவு (மே. 5) முதல் பதிவு செய்து, இ-பாஸ் பெற்று கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்திருந்தார். இ-பாஸ் வழங்குவதற்கான நடைமுறைகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாகவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொடைக்கானலில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் போல, கடும் விதிமுறைகள் அமல்படுத்தப்படாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

Trending News

Latest News

You May Like