கூவமாக மாறிவரும் கொடைக்கானல் நட்சத்திர ஏரி !
கொடைக்கானல் நட்சத்திர ஏரி கூவமாக மாறிவருவதகாவும், இது தொடர்பாக நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.
உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இங்கு வருடந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலா தலங்களை காண்பது வழக்கம்.
இதில் ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருவார்கள் இங்கு நுழைவாயிலிலேயே வெள்ளி நீர்வீழ்ச்சி நகர்ப்பகுதிகளில் நட்சத்திர வடிவிலான ஏரி பூங்கா மற்றும் கோக்கர் வாக்ஸ் ரோஜா பூங்கா மற்றும் தூண்பாறை சூசைபாயிண்ட்.அமைதிப்பள்ளத்தாக்கு பேரிஜம் ஏரி எனசுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதிகளவு சுற்றுலா தலங்கள் உள்ளன.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்வது கொடைக்கானல் பகுதியில் குறிப்பாக நகராட்சி அலுவலகம் அருகிலேயே சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட நட்சத்திர ஏரியாகும் இந்த ஏரியை காண்பதற்கும் மற்றும் இந்த ஏரியில் படகு சவாரி செய்வதற்கும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் விரும்பி வருவது வழக்கம் மேலும் இந்த நட்சத்திர வடிவிலான ஏரியை சுற்றி வருவதற்காக தினமும் காலையிலும் மாலையிலும் சுற்றுலா பயணிகள் சைக்கிள் மற்றும் குதிரை அதேபோல் கொடைக்கானல் பொதுமக்கள் தினமும் காலை மாலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் நட்சத்திரமே ஏறி சுற்றுப் பகுதிகளில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்குவதற்காக பல்வேறு கடைகள் அமைந்துள்ளன இப்படி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ள நட்சத்திர ஏரி தற்போது கழிவுநீர் வெறியாக குறிப்பாக குறியாகவே உள்ளது. அனைத்து பகுதிகளும் மாசுபட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் நிற்கும் பூங்கா மற்றும் ஏறி பகுதியை இணைக்கும் இடத்தில் கழிவுகள் துர்நாற்றம் பிசி வருவதாகக் கூறப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து சுற்றுலா பயணிகளை கவரும் இந்த நட்சத்திர ஏரியை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் துர்நாற்றம் வீசும் கூவம் நதியை மாற்றி வருகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏரியைச் சுற்றியுள்ள சுற்றுப்பகுதியில் உள்ள விடுதிகளில் இருந்து கழிவு நீர் வருகிறது அதே போல் மரங்கள் விழுந்து அப்படியே அழுகி உள்ளது படர்தாமரை மற்றும் ஆகாய தாமரை போன்று அதிக அளவு கழிவுகளை சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.
வரும் புத்தாண்டன்று அதிக அளவு வெளி மாநில மக்களும் தமிழகத்தில் உள்ள பொதுமக்களும் சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்காக அதிக அளவில் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.