1. Home
  2. தமிழ்நாடு

வாஸ்து அறிவோம் : சமையலறையில் தட்டுப்பாடில்லாமல் இருக்க வேண்டியவை..!

1

அரிசி : அரிசி சமையல் கட்டில் இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு பொருள். அரிசி தான் சமையல் கட்டிற்கே ராஜா என்று கூறலாம். எல்லாவிதமான மங்கள காரியங்களுக்கும் அரிசி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை நிற அரிசியில் சுக்கிர வாசம் உண்டு. இந்த அரிசி தட்டுப்பாடு இல்லாமல் எப்பொழுதும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். தீர்ந்து போவதற்கு முன்பே, நினைவு கொண்டு வாங்கி வையுங்கள். இதனால் சுக்கிர தோஷத்திற்கு ஆளாக நேரிடும் கவனம் வேண்டும். அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் தொழிலில் வளர்ச்சி குறையும், செல்வ வளம் குன்றும்.

உப்பு : பாற்கடலில் ஜனனித்த மகாலட்சுமி தேவி உப்பில் நிறைந்து காணப்படுகிறாள். மகாலட்சுமி அம்சமாக கருதப்படும் உப்பு, எப்பொழுதும் குறைவில்லாமல் இருக்க வேண்டும். உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், ஸ்ரீதேவியின் அருள் குறையும், இதனால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் இரட்டிப்பாகும். பொருளாதார ரீதியான பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

மஞ்சள் : மஞ்சள் மங்களகரமான ஒரு பொருள். மஞ்சளுக்கு சமையல் கட்டில் எப்பொழுதும் தட்டுப்பாடு வந்து விடக்கூடாது. மஞ்சள் சுத்தமாக இல்லை என்றால், நவகிரகங்களில் குரு பகவானின் சாபத்திற்கு ஆளாவீர்கள். குரு பகவானின் அம்சம் நிறைந்த இந்த மஞ்சள் எப்பொழுதும் வீட்டில் இருந்தால், மங்களகரமான காரியங்கள் நடப்பதில் தடை இருக்காது. வீட்டிற்கு பயன்படுத்தும் மஞ்சளை யாரிடமிருந்தும் வாங்கக்கூடாது. நீங்களும் யாருக்கும் தானமாக கொடுக்கக்கூடாது. மஞ்சள் குறைந்தால் சுபகாரிய தடை ஏற்படும். வாழ்வில் ஏமாற்றங்களும், விரக்தியும் உண்டாகும். மந்தமான மனநிலையில் இருப்பீர்கள், எனவே மஞ்சள் இருப்பு குறையுமுன் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

கோதுமை : சமையற்கட்டில் அரிசி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போல கோதுமையும் முக்கியமானது. அரிசியும், கோதுமையும் இல்லாத வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்காது. கோதுமை மாவை பயன்படுத்தும் பொழுது கடைசிவரை சுரண்டி எடுத்து உபயோகிக்க கூடாது. மாவு தீர்ந்து போகும் முன்னர் வாங்கி வந்து நிரப்பி வையுங்கள். கோதுமை மாவு சூரிய அருள் படைத்தது. சூர்ய பகவானின் அருள் இன்றி குடும்பத்தில் வளர்ச்சி என்பது இல்லை. ஒளிமயமான எதிர்காலத்திற்கு எப்பொழுதும், சமையற்கட்டில் கோதுமையை தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வது இல்லத்தரசியின் கடமையாகும்.

ஊறுகாய் : ஊறுகாய் குபேர அம்சம் உடையது. ஊறுகாய் பிரியராக இருக்கக்கூடியவர் குபேரர். வீட்டில் குபேர அருள் உண்டாக ஊறுகாயை குறைவில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Trending News

Latest News

You May Like