1. Home
  2. தமிழ்நாடு

டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிக்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

1

 எந்தவகையான வாகனங்களை இயக்க வேண்டும் என்றாலும் ஒருவர் கட்டாயம் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.முதலில், இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்களை இயக்க டிரைவிங் லைசென்ஸ் எடுக்கிறீர்கள் என்றால் அதற்கு முன் எல்எல்ஆர், அதாவது பழகுநர் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதுதான் அடிப்படை.

18 வயது பூர்த்தி செய்த யாரும் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க விண்ணப்பிக்கலாம். வட்டார போக்குவரத்து கழகத்துக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் https://sarathi.parivahan.gov.in என்ற இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்கலாம். 

நீங்கள் சுயமாக வீட்டில் இருந்தும் விண்ணப்பிக்கலாம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி வழியாகவும் பழகுநர் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் வசிக்கும் மாவட்டம், தாலுகா, பின்கோடு கொடுத்தால் உங்கள் பகுதிக்கான வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தேர்வு செய்ய வேண்டும்.

முகவரிச் சான்று, வயது சான்று ஆகியவற்றுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை கொடுக்கலாம். இதுதவிர வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ரத்த வகை சான்று, புகைப்படம் ஆகியவற்றையும் பழகுநர் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது ஆன்லைனில் இணைக்க வேண்டும். 

பின்னர் விண்ணப்பித்தவர் பழகுநர் ஓட்டுநர் உரிம தேர்வில் பங்கேற்க வேண்டும். ஒருமுறை தோல்வியுற்றாலும் மீண்டும் அதற்கான கட்டணத்தை செலுத்தி அடுத்த நாளே கூட தேர்வில் பங்கேற்கலாம். 

அதேநேரத்தில் ஓட்டுநர் பயிற்சிக்கு நீங்கள் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் தங்கள் நான்கு வாகனத்தில் எல் போர்டு ஸ்டிக்கரை கட்டாயம் ஒட்ட வேண்டும். இரு சக்கர வாகனம் என்றால் ஓட்டி பயிற்சி பெறுபவரைத் தவிர வேறு யாரும் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருக்கக்கூடாது. இவையெல்லாம் அடிப்படை போக்குவரத்து துறை விதிமுறைகள். இவற்றை மீறும்போது சட்ட நடவடிக்கைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

Trending News

Latest News

You May Like