1. Home
  2. தமிழ்நாடு

இந்திய அணிக்கு கேப்டன்ரானார் கே.எல் ராகுல்..!

1

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் கம்பீரின் முதல் பணி இலங்கைக்கு எதிரான வெளிநாட்டில் நடைபெறவுள்ள தொடரில் தொடங்கும். இந்த தொடரில் இந்தியா மூன்று டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. தொடருக்கான அட்டவணையை இரு நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகளும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்த தொடர் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற உள்ளது.அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. எனவே அந்தத் தொடர்களில் கேப்டனாக செயல்படப் போவது யார் என்ற கேள்வி காணப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா - இலங்கை இடையேயான, டி20, ஒருநாள், மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 27ம் தேதி தொடங்குகிறது. இதில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு கே. எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கௌதம் கம்பீர் பயிற்சியாளரான பிறகு செய்யப்பட்ட முதல் மாற்றம் இதுவாகும்.

ரோகித் சர்மா ஏற்கனவே டி20  கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்டார். எனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட உள்ளதாக தெரிய வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட அவர் 2022 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற அனுபவத்தை கொண்டுள்ளார். மேலும் 2022 – 2023 காலகட்டங்களில் அவர் இந்தியா விளையாடிய பெரும்பாலான டி20 தொடர்களில் கேப்டனாக செயல்பட்டார்.

Trending News

Latest News

You May Like