1. Home
  2. தமிழ்நாடு

பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

1

அசாம் மாநிலத்தில் ஐபிஎல் தொடரின் 65 ஆவது லீக் போட்டியில் PBKS – RR அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார் . 

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் கைடமோர் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்ததுது ஆட்டமிழக்க ரியான் பராக் மட்டும் அதிகாரபட்சமாக 48 ரன்கள் எடுத்தார் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்தது .

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பஞ்சாப் அணி விளையாடியது. 

பஞ்சாப் அணியின் சார்பில் பரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பரப்சிம்ரன்சிங் 6 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய ரூசோ 22 ரன்களும், சஷாங் சிங் (0) ரன் ஏதும் எடுக்காமலும், ஜானி பேர்ஸ்டோ 14 ரன்களும் எடுத்து வெளியேறினர்.அடுத்ததாக கேப்டன் சாம் கரன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் ஜிதேஷ் சர்மா 22 ரன்களில் கேட்ச் ஆனார்.மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன் 38 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

இறுதியில் சாம் கரன் 63 (41) ரன்களும், அசுடோஸ் சர்மா 17 (11) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது.

 

Trending News

Latest News

You May Like