1. Home
  2. தமிழ்நாடு

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி..!

1

சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் CSK – PBKS அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார் .இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே மற்றும் கேப்டன் ருதுராஜ் களமிறங்கினர்.

நிதானமாக ஆடிய இருவரும் அணிக்கு தேவையான ரன்களை மெல்ல மெல்ல எடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 29 ரன்களில் வெளியேறினார்.இதையடுத்து மைதானத்திற்குள் வந்த அதிரடி ஆட்டக்காரர் துபேவை டக் அவுட் செய்து வெளியேற்றினார் ஹாஸ்பிரீத் சிங் . பின்னர் ஜடேஜாவையும் ஹாஸ்பிரீத் சிங் 2 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பினார் .

அடுத்து வந்த ரிஸ்வி 21 ரன்னில் வெளியேற இந்த பக்கம் பொறுப்புடன் ஆடிய கேப்டன் ருதுராஜ் அரைசதம் கடந்து அசத்தினார் . ருதுராஜுடன் ஜோடி சேர்ந்து ஆடி வந்த மெயின் அலி 15 ரன்னில் வெளியேற அவரை தொடர்ந்து ருதுராஜும் ஆட்டமிழந்தார்.

பின்னர் கடைசி இரு ஓவர் இருக்கும் போது களத்திற்கு வந்த தோனி அவரால் முடிந்ததை செய்தார் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 162 ரன்கள் எடுத்தது.இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பஞ்சாப் அணி விளையாடியது. 

இதனையடுத்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் பரப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.இந்த ஜோடியில் பரப்சிம்ரன் சிங் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக பேர்ஸ்டோவுடன் ரிலி ரூசோ ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். பின்னர் இந்த ஜோடியில் ஜானி பேர்ஸ்டோ 46 (30) ரன்களில் ஷிவம் துபே பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரூசோவும் 43 (23) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.

முடிவில் ஷஷாங் சிங் 25 (26) ரன்களும், சாம் கரன் 26 (20) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் ஷர்துல் தாக்கூர், கிலிசன் மற்றும் சிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Trending News

Latest News

You May Like