கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்.. அடுத்தடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமிகள் !

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் கோரம் அடங்குவதற்குள் அங்கு அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்துவருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 8 ஆம் தேதி வீட்டின் அருகே தனியாக நின்ற 14 வயது சிறுமியை ஒருகும்பல் கடத்தியது.
சிறுமியை வனப்பகுதிக்குள் தூக்கிச்சென்று அக்கும்பல் கூட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக சிறுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் சிறுமி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கு முன்பு அவர் கடைசி நேரத்தில் கூறியதால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வெளியே தெரியவந்தது. இதனையடுத்து அக்கும்பலில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
இதேபோல், இதேபோல் அம்மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமிக்கு மூன்று இளைஞர்கள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். நீண்ட நாட்களாக இந்த கொடூரம் தொடர்ந்துள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான அவர்களை தீவிரமாக தேடி வருகின்றன.
newstm.in