காங்கிரஸில் குஷ்புவின் தேசிய அளவிலான பதவி பறிப்பு..

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, பாஜகவில் இன்று இணைய உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணையவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றுவிட்டு திரும்பிவந்த நடிகை குஷ்பு, நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென அவசரம் அவசரமாக டெல்லி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார்.
அப்போது நடிகை குஷ்புவிடம் நிருபர்கள், நீங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வருகிறதே உண்மையா? என்று கேட்டனர். அதற்கு அவர், “கருத்து சொல்ல விரும்பவில்லை” (நோ காமண்ட்ஸ்) என பதில் அளித்தார். அவருடன் அவருடைய கணவரும், திரைப்பட இயக்குனருமான சுந்தர்.சி.யும் உடன் சென்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டார். குஷ்புவின் பதவி பறிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் பிரணவ் ஜா அறிவித்துள்ளார்.
பாஜகவில் இணைய டெல்லி சென்ற நிலையில் குஷ்பு மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
newstm.in