1. Home
  2. தமிழ்நாடு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பூ..!

1

நடிகை குஷ்பூ திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் பணியாற்றிய நிலையில் பாஜகவில் இணைந்தார். எந்த கட்சியில் இருந்தாலும் தனது கருத்துக்களை துணிச்சலாக கூறுபவர் குஷ்பூ. பெண்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக பேசி வந்த குஷ்பூ பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் சமீப காலங்களில் சில விஷயங்களில் குஷ்பூ மௌனம் காத்தது விமர்சனத்தை கிளப்பியது. மல்யுத்த வீராங்கனைகள் பாஜகவைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்த போது குஷ்பூ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இழுத்து வரப்பட்ட போதும் பாஜக அரசுக்கு எதிராக குஷ்பூ பேசவில்லை. அது குஷ்பூ மீது பொது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் அனுப்பினார்.

கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி குஷ்பூ அனுப்பிய கடிதத்தை தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த அமைச்சக இயக்குநரிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தின் மூலம் ராஜினாமா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like