“குஷ்பூ பாஜகவுக்கு கட்டாயம் வர வேண்டும்” : இளம் நிர்வாகி அழைப்பு!

குஷ்பூ மிகவும் தைரியமான பெண் என்றும், அவர் பாஜகவுக்கு வர வேண்டும் எனவும் அக்கட்சியின் இளம் நிர்வாகி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
குஷ்பூ பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்து சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். குஷ்பூ பாஜகவில் சேர்ந்தால் வரவேற்பேன் என அவர் கூறியுள்ளார்.
குஷ்பூ பாஜகவில் சேர்ந்தால் அவர் கட்சி மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும், பாஜக தமிழகத்தில் வேகமாக வளர்கிறது என்ற உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
குஷ்பு மிகவும் தைரியமான பெண்மணி, அவரின் தைரியம் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு ஊக்கம் கொடுப்பவை என்றும் அரசியலில் பெண்களுக்கு தைரியமும் துணிச்சலும் மிகவும் முக்கியம், அது அவரிடம் நிறையவே இருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.
எந்த அரசியல் கருத்தாக இருந்தாலும் நல்லப் புரிதலோடு தெளிவாகப் பேசக்கூடிய குஷ்பூ, பாஜகவுக்கு வந்தால் பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வார் என்பதால் குஷ்பு பாஜகவுக்கு கட்டாயம் வரவேண்டும் என அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
newstm.in