நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து: குஷ்பு இரங்கல்!

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ரக விமானம் விபத்துக்குள்ளானது மொத்த நாட்டையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது வருத்தத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ள விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, “அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஊழியர்கள் மற்றும் பயணிகள் என மொத்தம் 242 பேருடன் சென்று கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. வாழ்க்கை எவ்வளவு பலவீனமாது மற்றும் கணிக்க முடியாதது. அதே நேரத்தில் இந்த விபத்தின் மூலம் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.