1. Home
  2. தமிழ்நாடு

ஜி-20 விருந்துக்கு அழைக்கப்படாதது குறித்து கார்கே பேட்டி..!

1

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அதன் 18 உச்சி மாநாடு டெல்லி நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லி வந்து குவிந்துள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருந்து நேற்று விருந்தளித்தார். இந்த விருந்து நிகழ்வு அதன் அழைப்பிதழில் தொடங்கி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. விருந்துக்கான அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியது. அதன் சூடு குறைவதற்கு முன்பே, விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

குடியரசுத் தலைவரின் விருந்துக்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது காங்கிரஸ் தலைவர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, "அவர்கள் அதில் அரசியல் செய்திருக்கக் கூடாது" என்று பாஜக மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like