1. Home
  2. தமிழ்நாடு

திடீரென மயக்கமடைந்த கார்கே : தாங்கி பிடித்த நிர்வாகிகள்..!

1

10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்கு  மொத்தம் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கும் நிலையில் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. 

அங்கே ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, பாஜக, காங்கிரஸ் என்று பல கட்சிகள் களத்தில் உள்ளன. அங்கு ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில் மூன்றாவது மற்றும் கடைசிக் கட்ட தேர்தல்  அக். 1-ம் தேதி நடைபெறுகிறது. 

இதனால் அங்கு பல்வேறு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று காஷ்மீரில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். காஷ்மீரில் உள்ள கதுவா என்ற பகுதியில் அவர் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். 

அப்போது மேடையில்  பேசிக் கொண்டு இருக்கும் போதே கார்கே திடீரென மயக்கம் அடைந்தார். கார்கே பேச்சை நிறுத்திக் கொண்டு நிற்கவே சிரமப்படுவதைப் பார்த்த உடனே மேடையில் இருந்த மற்ற நிர்வாகிகள் ஓடிச் சென்று அவரை தாங்கிப் பிடித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

அதேநேரம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், கார்கே தனது உரையைத் தொடர்ந்தார். அப்போது அவர், எனக்கு 83 வயதாகிறது. நான் சீக்கிரம் உயிரிழக்க மாட்டேன். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிருடன் இருப்பேன் என்று  பேசினார்.  

Trending News

Latest News

You May Like