1. Home
  2. தமிழ்நாடு

காலிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் : நடிகர் கபில் சர்மா உணவகத்தில் துப்பாக்கிச்சூடு..!

1

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கபில் சர்மா, நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான தி கபில் ஷர்மா ஷோ மற்றும் காமெடி நைட்ஸ் வித் கபில் ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர்.

இவர், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே என்னுமிடத்தில் சமீபத்தில் புதிதாக கப்ஸ் கேப் என்ற உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகத்தின் மீது நேற்று இரவு காரிலிருந்த மர்ம நபர் துப்பாக்கியால் 9 முறை சுட்டுவிட்டு தப்பிவிட்டான். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
 

இந்த சம்பவத்துக்கு இந்தியாவால் தேடப்பட்டு வரும் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜீத் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளான். இது பற்றி கனடா போலீசார் விசாரிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like