1. Home
  2. தமிழ்நாடு

கேஎஃப்சியில் ரூ.1000க்கு வாங்கிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

1

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏராளமான உணவகங்கள் உள்ளன. அந்த வகையில் நான் வெஜ் பிரியர்களுக்கு பிடித்தமான கேஎஃப்சி உணவகமும் செயல்பட்டு வருகிறது.இங்கு கோபிநாத் என்பவர் ரூ 929 க்கு கிரிஸ்பி சிக்கன் வாங்கியுள்ளார். பின்னர் தனது குடும்பத்தினருடன் சாப்பிட உட்கார்ந்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
 

சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே அவர் அவரது குடும்பத்தினர் சாப்பிடுவதை தடுத்து நிறுத்தினார். பிறகு சிக்கனை துண்டு துண்டாக எலும்பில் இருந்து பிரித்து பார்த்த போது அதில் ரத்தம் உறைந்திருந்தது. மேலும் சிக்கனும் சரியாக வேகவில்லை.

 

இதையடுத்து அந்த சிக்கனை கவுன்ட்டர் அருகே கொண்டு சென்ற கோபிநாத், கடை ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதம் செய்தார். அப்போது கடை ஊழியர்கள் காசு கொடுத்துவிடுவதாக சொன்னார்கள். ஆனால் கோபிநாத்தோ "உங்கள் காசோ வேறு சிக்கனோ எனக்கு தேவையில்லை. ரூ 1000 காசு போட்டு சிக்கன் வாங்கினால் இப்படித்தான் கொடுப்பீர்களா? சிக்கன் வெந்திருந்தால்தானே எலும்பு வேகும். சிக்கனையே வேகாமல் எடுத்துவிட்டீர்கள்" என கடுமையாக வாக்குவாதம் செய்தார். ஊழியரோ, "ஏதோ ஒன்று இரண்டு அப்படியிருந்திருக்கும் சார். இனிமேல் தவறு நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறோம்" என்றார்.

 

Trending News

Latest News

You May Like