1. Home
  2. தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! அதிரடி சலுகைகள்!!

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! அதிரடி சலுகைகள்!!

தமிழகத்திற்கு 2020-21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

7,233 ஏக்கர் ஆக்கரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.375 கோடி ஒதுக்கீடு.

ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்.

துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மானிய விலையிலேயே தொடர்ந்து வழங்கப்படும். மானியத்தை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! அதிரடி சலுகைகள்!!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், மெகா உணவு பூங்கா அமைக்க ஒப்புதல்.

சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

4,997 விசைப் படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.

சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும்

கீழடியில் கிடைக்கும் பொருட்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி ஒதுக்கீடு.

தமிழகத்தின் மொத்த வருவாய் ரூ.2,19, 375 கோடி.

* தமிழகத்தின் மொத்த செலவு ரூ.2,41.601 கோடி

* தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.22,225 கோடி.

* 2018-19 ஆம் நிதியாண்டில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.17% வளர்ச்சி.

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! அதிரடி சலுகைகள்!!
* 2019-20 ஆம் நிதியாண்டில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27%

முத்திரைத்தாள் வரி 1 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதமாக குறைப்பு

பசுமை வீடு திட்டத்தில் கட்டப்படும் வீடு ஒன்றுக்கு கட்டுமான செலவை ரூபாய் 2.10 லட்சமாக உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்பயா நிதியின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.75.02 கோடிகளில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.

அம்மா உணவகத் திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏழைக் குடும்பங்களுக்கு எல்ஐசியுடன் இணைந்து விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.

விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்படும்.

விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கு இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.

இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.

newstm.in

Trending News

Latest News

You May Like