1. Home
  2. தமிழ்நாடு

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை...!

1

கடந்த 2008 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா ஏமனுக்கு செவிலியராக வேலைக்கு சென்றார். பின்னர் ஏமனைச் சேர்ந்த தலால் அப்தோ மெஹ்தி என்பவருடன் சேர்ந்து மருத்துவமனை ஒன்றை நிமிஷா பிரியா தொடங்கினார்.

அப்போது அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுவதற்கு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் மருத்துவமனை மூலம் கிடைத்த வருவாயை தலால் முறைகேடாக எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிமிஷா பிரியா அவருடன் கேட்டபோது அவரை தலால் மிரட்டியதுடன், அவரது பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டார். இதனால் வேறு வழி இல்லாமல் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது தலாலுக்கு விஷ ஊசியை நிமிஷா பிரியா செலுத்தினார்.


அவர் மயங்கியதும் தனது பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு அவரது பிடியிலிருந்து தப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நிமிஷா பிரியா அவருக்கு விஷ ஊசி செலுத்தியுள்ளார்.


ஆனால் ஓவர் டோஸ் ஆனதால் தலால் வாயிலும் காதிலும் ரத்தம் வடிந்து பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் காட்டுத்தீ போல ஏமன் முழுவதும் பரவியது. வெளிநாட்டு பிரஜை ஒருவர் ஏமன் குடிமகனை விஷ ஊசி செலுத்தி கொலை செய்தது அந்நாட்டு ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.


இதன் காரணமாக நிமிஷா பிரியாவை ஏமன் காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை விரைவில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த 2017- ஆம் ஆண்டில் இந்த தீர்ப்பு வெளியானது.


இதைத்தொடர்ந்து செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்தார். இதற்கிடையே மரண தண்டனையில் இருந்து அவரை காப்பாற்றுவதற்கு அவரது தாயார் நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.


மேலும் நிமிஷா பிரியாவை பாதுகாக்கும் நோக்கில், ஷேவ் நிமிஷா பிரியா என்ற இயக்கமும் தொடங்கப்பட்டு அதற்காக நிதி திரட்டப்பட்டது. இருந்த போதிலும் நிமிஷா பிரியாவை காப்பாற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. இனி கடைசி வாய்ப்பாக அவரால் உயிரிழந்த தலால் குடும்பத்தினர் நிமிஷாவை மன்னித்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என சேவ் நிமிஷா இயக்க தலைவர் சாமுவேல் ஜெரோம் கூறியுள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி வெளியாகிவிட்டது. வரும் 16-ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற போவதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இருப்பினும் அவரை காப்பாற்றி விடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.


நிமிஷா பிரியாவை தலால் குடும்பத்தினர் மன்னித்தால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும். இதற்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அவர்களுக்கு கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் பணத்தை வாங்குவதற்கு அவர்கள் தயாராகவில்லை. தலால் குடும்பத்தினர் பணத்தை ஏற்றுக் கொண்டு நிமிஷா பிரியாவை மன்னித்தால் மட்டுமே அவரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும். இதற்காக கடுமையாக போராடி வருகிறோம்.


ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் தருவதாக கூறுகிறோம். இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதற்கு தலால் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என்று சாமுவேல் ஜெரோன் கூறினார்.

நிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி கடந்த ஆண்டிலிருந்து ஏமனில் தங்கி இருந்து தனது மகளை காப்பாற்றுவதற்காக கடும் சிரமம் மேற்கொண்டு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like