1. Home
  2. தமிழ்நாடு

இனி யானைகளை இதற்கு பயன்படுத்த கூடாது - கேரளா உயர்நீதிமன்றம்..!

1

கேரளாவில் நடக்கும் அணிவகுப்பில், யானைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து கேரளா ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயசங்கரன், கோபிநாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
 

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொது சாலைகளில் யானைகள் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை.
 

* யானையை ஒரு நாளில் 125 கி.மீ.க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது. ஒரு நாளில் எந்த யானையையும் வாகனத்தில் 6 மணி நேரத்திற்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது.
 

* இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை யானையை வாகனங்களில் ஏற்றிச் செல்லக் கூடாது.
 

* இரண்டு யானைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 3 மீட்டர் தூரம் இருக்க வேண்டும்.
 

*வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கூடாது என கேரளா ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

* அணிவகுப்பு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது.
 

* யானைகளை அணிவகுப்பு நிகழ்ச்சியில், பயன்படுத்தும் போது கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
 

* உடற்தகுதி சான்றிதழ்களை அரசு கால்நடை டாக்டர் மட்டுமே வழங்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like