1. Home
  2. தமிழ்நாடு

கேரளாவில் விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்! முக ஸ்டாலின் அறிவிப்பு..!

1

கேரளாவில் ரயில் தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணியின் போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தமிழகத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் நாலு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு அவர்களுடன் எடுத்துவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில் விபத்தில் பலியான 4 தழர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பாரதப்புழா பகுதியில் ரயில்வே பாலம் உள்ளது. அந்த பாலத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தமிழர்கள் ரயில் மோதி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. கேரளாவின் பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே தண்டவளாத்தில் ரயில்வே ஊழியர்கள் 4 பேர் சுத்தம் செய்யும் பணி செய்தனா். அந்த சமயத்தில் அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்தது. அப்போது உடனடியாக ரயில்வே தண்டவாளத்தை விட்டு செல்ல முடியாமல் தவித்த தொழிலாளர்கள் 4 பேர் மீதும் ரயில் மோதியது. இதில் அவர்கள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதில் ஒருவரது உடல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில் ரயில் மோதி உயிரிழந்தவா்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Trending News

Latest News

You May Like