1. Home
  2. தமிழ்நாடு

வனப்பகுதிக்குள் சிக்கித் தவித்த பழங்குடியின குழந்தைகளை பத்திரமாக மீட்ட கேரள வனத்துறையினர்!

1

வயநாடு நிலச்சரிவுக்குப் பிறகு காணாமல் போனவர்களை வனத்துறையினரும், தீயணைப்புப்படை வீரர்களும் தேடிவந்த நிலையில், ஒரு பழங்குடி குடும்பம் குறித்து தகவல் அறிந்து வனத்துக்குள் தேட ஆரம்பித்தனர்.

தனது கணவரும், 3 குழந்தைகளும் எங்கோ சிக்கியிருப்பதாக சாந்தா என்ற பழங்குடி பெண் அளித்த தகவலின் பேரில் மீட்புக் குழுவினர் தங்கள் தேடுதல் பணிகளைத் தொடர்ந்தனர். வனத்துக்குள் மிகக்கடினமான பாதைகளை கடந்து, பல கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் மணிக்கணக்கில் தேடிக்கொண்டிருந்தனர்.

ஒருவழியாக, Soochipara அருவிக்கு அருகே, Eratukund காலனியில் Padavetti Kunnu என்ற இடத்தில் மலையில் கிருஷ்ணனும், அவரின் மூன்று குழந்தைகளையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். நிலச்சரிவில் இருந்து தப்புவதற்காக இவர்கள் மலையில் ஏறி பாதுகாப்பாக தஞ்சமடைந்தது தெரியவந்துள்ளது. 2 நாட்களாக எந்த உணவும் சாப்பிடாமல் நான்கு பேரும் பட்டினி கிடந்துள்ளனர்.

இவர்களுக்கு வனத்துறையினர் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப்பொருட்களை சாப்பிடக்கொடுத்தனர். அத்துடன் நான்கு பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். 


 

Trending News

Latest News

You May Like