1. Home
  2. தமிழ்நாடு

பகிரங்க மன்னிப்பு கேட்ட கேரள காங்கிரஸ்...!

1

கேரள காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் வலைதளப்பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இத்தாலி சென்ற போது அங்கு போப் பிரான்சிஸுடன் அவர் சந்தித்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, "இறுதியாக, போப்பிற்கு கடவுளைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது" என பதிவிட்டது.

இந்தப் பதிவின் மூலம் காங்கிரஸ் கட்சி, கிறிஸ்துவ சமூகத்தை அவமதிப்பதாக கேரள மாநில பாஜக கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ஜார்ஜ் குரியன் கூறுகையில், "காங்கிரஸின் இந்த ட்வீட் பிரதமர் மோடியை, இறைவன் யேசுவுடன் ஒப்பிடுகிறது. இது முற்றிலும் தேவையற்றது மற்றும் யேசுவை மதிக்கும் கிறிஸ்தவ சமூகத்தை அவமதிப்பதாகும். காங்கிரஸ் இந்த நிலைக்கு வந்திருப்பது வெட்கக்கேடானது” என்றார்.

இந்த பதிவு சர்ச்சையான நிலையில், கிறிஸ்தவர்களை கேரள காங்கிரஸ் கட்சி அவமதித்துவிட்டதாக பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. போப் – மோடி சந்திப்பை கேலி செய்து பதிவிட்டதற்கு கேரள காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோரியது. ”கிறிஸ்தவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்” என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி மீண்டும் வெளியிட்ட மற்றொரு பதிவில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கடவுளைப் போலக் கருதும் போப்பை அவமதிக்கும் எண்ணத்தை எந்த காங்கிரஸ் தொண்டர்களும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டு இந்த நாட்டின் விசுவாசிகளை இழிவுபடுத்தும் நரேந்திர மோடியை கேலி செய்வதில் காங்கிரஸுக்கு எந்த தயக்கமும் இல்லை. எங்கள் பதிவு கிறிஸ்தவர்களுக்கு ஏதேனும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால் நாங்கள் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like