1. Home
  2. தமிழ்நாடு

கேரளா குண்டு வெடிப்பு குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் : டிபன் பாக்ஸ் குண்டை தேர்வு செய்தது ஏன்?

1

கேரள மாநிலம் களமசேரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்து உள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கலமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் நேற்று முன்தினம் காலை நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.

ஜெகோவா கிறிஸ்துவ பிரிவை சேர்ந்தவர்கள் நடத்திய ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு நடத்த இடத்தில் 2000 பேர் வரை கூடி இருந்தனர். வெடிகுண்டு படை, தடயவியல் குழு மற்றும் என்ஐஏ குழு ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அதே நேரத்தில் கண்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 12 வயது சிறுமி பலியாகி உள்ளார். இதுதொடர்பாக கேரளா டிஜிபி ஷேக் தர்வேஷ் அளித்த பேட்டியில், கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என்பது உறுதி ஆகி உள்ளது. 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்தது, குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணை செய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 9.40 மணியளவில் குண்டு வெடித்துள்ளது, என்று அவர் கூறியுள்ளார். 

இந்த நிலையில்தான் கேரளாவின் களமசேரி பகுதியில் நடந்த ஜெபக் கூட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு பயன்படுத்தக் காரணம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் டொமினிக் மார்ட்டின் பரபரப்பு வாக்குமூலங்களை கொடுத்துள்ளார். அந்த சபையின் செயல்பாடு பிடிக்கவில்லை என்பதால் 2 வருடமாக திட்டமிட்டு இதை செய்ததாக கூறியுள்ளார்.

ஜெபக் கூட்டத்திற்கு வருவோர் வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவார்கள் என்பதால், திட்டமிட்டு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு தயாரித்தேன். அதைத்தான் சோதனை செய்ய மாட்டார்கள். நாள் முழுக்க தங்கி ஜெபம் செய்பவர்கள் டிபன் பாக்ஸ் கொண்டு வருவார்கள். அதனால் அதில் பாம் கொண்டு வந்தேன். பல நேரங்களில் டிபன் பாக்ஸ் பல கேட்பாரற்று கிடந்துள்ளன. இதை பயன்படுத்திக்கொண்டேன்.

நான் ஜெபக் கூட்டத்தில் வைத்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டை 2 மணி நேரமாக யாரும் கண்டுகொள்ளவில்லை. சந்தேகப்படவில்லை. அப்போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது இது வெடிக்கும் என்று. வெடிகுண்டை தன்னந்தனியாகத்தான் தயாரித்தேன். எனக்கு யாரும் உதவி செய்யவில்லை. அந்த சபையின் செயல்பாடு பிடிக்கவில்லை என்பதால் 2 வருடமாக திட்டமிட்டு இதை செய்ததாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் கேரள குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளாவை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like